2885. |
அடியிரண்
டோருடம் பைஞ்ஞான்கி ருபது |
|
தோள்தச
முடியுடை வேந்தனை மூர்க்கழித் தமுதன்
மூர்த்தியும்
கடிகம ழும்பொழில் சூழுமந் தண்கட
வூர்தனுள்
வெடிதலை யேந்தியும் வீரட்டா னத்தர
னல்லனே. 8
|
8, பொ-ரை: ஓர்
உடம்பில் இரண்டு கால்களும், இருபது
தோள்களும், பத்துத் தலைகளுமுடைய இலங்கை வேந்தனான
இராவணனின் மூர்க்கத் தன்மையை அழித்த முதல் பொருளாகிய மூர்த்தியும், முடை நாற்றமுடைய
பிரமனின் மண்டையோட்டை
ஏந்தியுள்ளவனும், திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்தில்
எழுந்தருளியுள்ள அரன் அல்லனோ?
கு-ரை:ஐந்நான்கிருபது
தோள்-ஐந்நான்காகிய இருபது தோள்.
தசம்-பத்து. மூர்க்கு-மூர்க்கத்தன்மை. வெடி-முடைநாற்றம்.
|