2899.
|
வேதியர்
கைதொழு வீழி மிழலைவி ரும்பிய |
|
ஆதியை
வாழ்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன்ஆய்ந்
தோதிய வொண்டமிழ் பத்திவை யுற்றுரை செய்பவர்
மாதியல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே. 11
|
11. பொ-ரை:அந்தணர்கள்
கைகூப்பித் தொழுது போற்றும்
திருவீழிமிழலையை விரும்பி வீற்றிருக்கும் இறைவனை, சோலைகள்
விளங்கும் சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் ஆராய்ந்து ஓதிய
ஒண்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் கூறிப் போற்றி வழிபடுபவர்கள்
உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமானின் மலர்
போன்ற திருவடிகளைச் சேர்ந்து முக்திப் பேற்றினைப் பெறுவர்.
கு-ரை:வேதியர்
கைதொழும் திருவீழிமிழலையாரை
ஞானசம்பந்தன் ஆய்ந்து பாடிய ஒண்தமிழ் பத்தும் வல்லவர்
அம்மாது பொருந்திய பாகனது மலர்போன்ற அடியைச் சேரவும்
வல்லராவார்.
|