| 
       
         
          | 3132. | வங்கமார் சேணுயர் வருகுறி யான்மிகு |   
          |  | சங்கமா 
            ரொலியகில் தருபுகை கமழ்தரு மங்கையோர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள்
 எங்கணா யகன்றன திணையடி பணிமினே.       4
 |       4. 
        பொ-ரை: வாணிகத்தின் பொருட்டு மிக்க நெடுந்தூரம் சென்ற கப்பல்கள் திரும்பிவரும் குறிப்பினை ஊரிலுள்ளவர்கட்கு
 உணர்த்த ஊதப்படும் சங்குகளின் ஒலியும், அகிற்கட்டைகளால்
 தூபம் இடுகின்றபோது உண்டாகும் நறுமணம் கமழும் புகையுமுடைய
 திருமயேந்திரப் பள்ளியுள், உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு
 பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளும் எங்கள் தலைவனான
 சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக.
       கு-ரை: 
        உயர்சேண் ஆர் வங்கம்-மிக்க நெடுந்தூரம் (வாணிகத்தின் பொருட்டுச்) சென்ற கப்பல். வருகுறியால் மிகுசங்கம்
 ஆர்ஒலி தரு-திரும்பி வரும் குறிப்பை ஊரார்க்கு உணர்த்த
 ஊதுவதால் பல சங்குகள் ஆரவாரிக்கும்; ஒலியையுடைய
 மயேந்திரப்பள்ளி.
      சேண்-நெடுந்தூரம், 
        "சேணிகந்து விளங்கும் செயிர்தீர்மேனி" என்னும் திருமுருகாற்றுப்படையாலும் அறிக.
 |