3171. |
மகரமா டுங்கொடி மன்மத வேடனை |
|
நிகரலா காநெருப் பெழவிழித் தானிடம்
பகரவா ணித்திலம் பன்மக ரத்தொடும்
சிகரமா ளிகைதொகுந் தென்குடித் திட்டையே. 2 |
2.
பொ-ரை: மீன்கொடியுடைய மன்மதன் எரிந்து
சாம்பலாகுமாறு நெருப்புப்பொறி பறக்க நெற்றிக் கண்ணைத் திறந்து
விழித்த ஒப்பற்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, வாள்
போல் மின்னும் முத்துக்களும், பல அணிவகைகளும் பதிக்கப்பெற்று
உயர்ந்து விளங்கும் மாளிகைகளையுடைய திருத்தென்குடித்திட்டை
என்பதாகும்.
கு-ரை:
மீன் அசையும் கொடியையுடைய மன்மதனாகிய
வேளை. வேள், எனலாகுமெனில் ஏனையவற்றினின்றும் பிரித்தற்கு
மன்மத வேள்தனை என்றார். மன்மதவேடனை - மன்மதவேள்தனை.
மன்மதவேள் இருபெயரொட்டுப் பண்புத்தொகை.
|