3217. |
பந்தணம்மவை யொன்றிலம்பரி |
|
வொன்றிலம்மென
வாசக
மந்தணம்பல பேசிமாசறு
சீர்மையின்றிய நாயமே
அந்தணம்மரு கந்தணம்மது
புத்தணம்மது சித்தணச்
சிந்தணர்க்கெளி யேனலேன்றிரு
வாலவாயரனிற்கவே. 7 |
7.
பொ-ரை: சுற்றமும், பற்றும் இல்லை என்று கூறியும்,
இரகசியமான வாசகங்களைப் பேசியும், குற்றமற்ற ஒழுங்கு
நெறியின்றியும், நியாயமற்ற நெறிநின்று, ஆருகதசமயத்தின் கொள்கை
இத்தகையது என்று கூறித்திரியும் சமணர்கட்கும், புத்த சமயத்தின்
கொள்கை இத்தகையது என்று கூறித்திரியும் புத்தர்கட்கும்,
அச்சமயங்களில் சித்தி பெற்றோர்கட்கும் ஆலவாயரன் என்றும்
துணை நிற்றலால், யான் எளியவன் அல்லேன்.
கு-ரை:
பந்தணம் - பந்தணைகள். ஒன்று இலம் - சிறிதும்
இல்லோம், பரிவு - ஆசை - வாசகமந்தணம். இரகசியமான
வாசகங் களை. சீர்மை - ஒழுங்கு. (அநாயமே. அந்தணம்).
அருகந்தணம் அது - ஆருகத சமயத்தின் கொள்கை அத்தகையது.
புத்தனம் அது - பௌத்த சமயத்தின் கொள்கை அத்தகையது.
சித்தனம் - சித்தர் தன்மை. "அருக்கரிலிருத்தி பெற்றோர்" என்பது
சூடாமணி நிகண்டு.
|