| 
       
         
          | 3307. | கழிக்க ரைப்படு மீன்கவர் வாரமண் |   
          |  | அழிப்ப ரையழிக் கத்திரு வுள்ளமே தெழிக்கும் பூம்புனல் சூழ்திரு வாலவாய்
 மழுப்ப டையுடை மைந்தனே நல்கிடே.     10
 |  
            10. 
        பொ-ரை: நீர்நிலைகளிலுள்ள மீன்களைக் கவர்ந்து உண்ணும் புத்தர்களையும், நன்மார்க்கங்களை அழித்த வரும்
 சமணர்களையும் அடக்க எண்ணுகிறேன். ஒலிக்கும் அழகிய ஆறு
 சூழ்ந்த திருவாலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே! மழுப்படையை
 உடைய மைந்தரே! உமது திருவுள்ளம் யாது?
       கு-ரை: 
        மீன் கவர்வார் புத்தர். அழிப்பவர் - நன்மார்க்கங்களை யெல்லாம் அழிப்பவர்கள். தெழிக்கும் - ஒலிக்கின்ற.
 பூம்புனல் - மெல்லியநீர். நல்கிடே - தெரிவித்தருள்வீராயின்.
 |