| 3366.  | 
          நாணுமோர்வு சார்வுமுன் நகையுமுட்கு | 
         
         
          |   | 
               நன்மையும் 
		பேணுறாத செல்வமும் பேசநின்ற 
			     பெற்றியான் 
			ஆணும்பெண்ணு 
            மாகிய வானைக்காவி  
                 லண்ணலார் 
            காணுங்கண்ணு மூன்றுடைக் கறைகொண்மிடற 
                 னல்லனே.                           6 | 
         
       
      
             6. 
        பொ-ரை: அஞ்ஞானத்தால் ஈசனை அறியாத பிறர்  
        நாணத்தக்க நாணமும், பதியை ஓர்ந்து அறிதலும், அறிந்தபின்  
        சார்ந்திருத்தலும், சார்தலினல் மகிழ்ச்சியும், மனத்தை அடக்கி  
        உள்கித் தியானம் செய்தலுமாகிய நன்மையும் உடையவர்களாய்,  
        எவற்றையும் பொருட்படுத்தாத வீரியமும் கொண்ட அடியவர்கள்  
        கொண்டாடிப் பேசத்தக்க தன்மையை உடைய, சிவபெருமான்  
        ஆணும், பெண்ணும் சேர்ந்ததாகிய அர்த்தநாரித் திருக்கோலத்தில்  
        திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலாய் மூன்று  
        கண்களையுடையவராய் விளங்குபவர் அல்லரோ? 
            கு-ரை: 
        நாணும் ஓர்வு - பிறர் நாணத்தக்க ஞானமும்,  
        சார்வும் - எவருக்கும் பற்றுக் கோடாதற்குரிய ஐசுவரியமும்.  
        முன்நகையும் - எவருக்கும் முற்பட்ட மகிழ்ச்சியை விளைக்கும்  
        புகழும். உட்கும் - எவரும் அஞ்சத்தக்க வீரியமும், நன்மையும்  
        திருவும். பேண் உறாத செல்வமும் - எவற்றையும் பொருட்படுத்தாத  
        வீரியமும். ஆகிய இவ்வாறு குணங்களையும்; பேசநின்ற -  
        அடியவர் கொண்டாடிப் பேசத்தக்க. பெற்றியான் - தன்மையை  
        உடையவன். 
	 |