3474. |
கானருகும் வயலருகுங் கழியருகுங் |
|
கடலருகும்
மீனிரிய வருபுனலி லிரைதேர்வெண்
மடநாராய்
தேனமர் தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங்
குடிமேய
வானமருஞ் சடையார்க்கென் வருத்தஞ்சென்
றுரையாயே. 4 |
4.
பொ-ரை: கடற்கரைச் சோலையின் அருகிலும், வயல்,
கழி, கடல் ஆகியவற்றின் அருகிலும் பெருகும் நீரில் ஓடுகின்ற
மீன்களை இரையாகத் தேரும் வெண்ணிறமான மட நாரையே!
தேன் துளிக்கும் மாலைகளையுடைய சிறுத்தொண்டர் பணிசெய்யத்
திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற, மாலை வானம்
போன்ற சிவந்த சடையுடைய சிவபெருமானிடம் சென்று என்
வருத்தத்தை உரைப்பாயாக.
கு-ரை:
கான் - கடற்கரைச் சோலை. (வயல், கழி, கடல்
ஆகிய இவ்விடங்களில் வரும் நீரில்) மீன்இரிய - சிறுமீன் ஓட
(பெரிய மீனை) இரை தேரும், எனத் தனித்தனி சென்றியையும்,
வானமரும் சடையார்க்கு - செவ்வானம் போலும் சடையையுடைய
பெருமானுக்கு. என் வருத்தம் உரையாய்
|