| 
         
          | 3527. | புற்றரவு பற்றியகை நெற்றியது |   
          |  | மற்றொருக 
            ணொற்றைவிடையன் செற்றதெயி லுற்றதுமை யற்றவர்க
 ணற்றுணைவ னுற்றநகர்தான்
 சுற்றுமணி பெற்றதொளி செற்றமொடு
 குற்றமில தெற்றெனவினாய்க்
 கற்றவர்கள் சொற்றொகையின் முற்றுமொளி
 பெற்றகயி லாயமலையே.               2
 |  
            2. 
        பொ-ரை: சிவபெருமான் புற்றில் வாழும் பாம்பைப் பற்றிய கையை உடையவர். நெற்றியில் ஒரு கண்ணுடையவர். ஒற்றை
 இடபத்தை உடையவர். முப்புரத்தை எரித்தவர். உமாதேவியை ஒரு
 பாகமாக உடையவர். உலகப் பற்றை நீக்கிய அடியவர்கட்கு நல்ல
 துணையாக விளங்குபவர். அத்தகைய பெருமான் வீற்றிருந்தருளும்
 இடமாவது. மலையிற் பிறக்கும் மணிகள் ஒளியிழக்குமாறு தன்னொளி
 மிக்க கயிலாய மலையாகும். கற்றவர்கள் போற்றித் துதிப்பதால்
 ஞான ஒளி பெற்ற சிறப்புடையது இக்கயிலாய மலையாகும்.
       கு-ரை: 
        புற்று அரவு - புற்றில் உள்ள பாம்பை. பற்றிய - பிடித்தகை. நெற்றியழ - நெற்றியில் உள்ளது. மற்று ஒரு கண் -
 மூன்றாவது ஆகிய ஓர் கண். ஒற்றைவிடையன் - ஒரு
 இடபத்தையுடையது. செற்றது எயில் - (அவர்) அழித்தது மதிலை.
 உற்றது உமை - பிரியாது உடம்பில் பொருந்தியது, உமையை.
 அற்றவர்கள் - பற்றற்றவர்களின். நல்துணை - நல்ல துணைவராவார்.
 (அத்தகைய சிவபெருமான்) உற்ற - தங்கிய. நகர் தான் -தலமாவது.
 சுற்றுமணி - சுற்றிலுமுள்ள இரத்தினங்கள், பெற்றது ஒளி
 உடையதாகிய ஒளியை. (அழித்த) செற்றமோடு - பகைமையோடு
 (இருந்தும்) குற்றம் இலது எற்று என -(இம்மலை) குற்றம் அற்றது
 ஆயினது எதனால் என்று, வினாய் - வினாவி, கற்றவர்கள் -
 அறிஞர்கள், சொல் தொகையின் - சொல்லும் புகழினோடு,
 முற்றம் - உலகை வளைப்பதாகிய, ஒளி பெற்ற - ஒளியைப்பெற்ற
 கயிலாயமலை. தன்னைச் சார்ந்தவர்களை அழிப்பது அறமா?
 மலையிற்கிடக்கும் மணிகள் ஒளியிழந்தனவே தன்னொளியால்
 அவ்வாறு செய்த இம்மலை குற்றமில்லாதது ஆகுமா? என்பது
 மூன்றாம் அடியின் பொருள்.
 |