3530. |
குடங்கையி னுடங்கெரி தொடர்ந்தெழ |
|
விடங்கிளர்
படங்கொளரவம்
மடங்கொளி படர்ந்திட நடந்தரு
விடங்கன திடந்தண் முகில்போய்த்
தடங்கட றொடர்ந்துட னுடங்குவ
விடங்கொளமி டைந்தகுரலால்
கடுங்கலின் முடங்களை நுடங்கர
வொடுங்குகயி லாயமலையே. 5 |
5.
பொ-ரை: உள்ளங்கையில் நெருப்பானது எரிய, படம்
கொண்டு ஆடுகின்ற பாம்பானது ஒளிர்ந்து திருமேனியில் படர,
நடனம் புரியும் பேரழகரான சிவபெருமான் வீற்றிருந்தருளும்
இடமாவது, மேகங்கள் கடல்நீரை முகந்து, மேலே சென்று எல்லா
இடங்களிலும் பரவி, இடிமுழக்கத்துடன் மழை பொழிய, அந்த
இடியோசை கேட்ட மெலிந்த நாகம் வளைந்த புற்றிலே பதுங்குகின்ற
திருக்கயிலாய மலையாகும்.
கு-ரை:
குடங்கையின் - உள்ளங்கையிலே. நுடங்கு - ஒசிந்து.
எரி -அக்கினி. தொடர்ந்து - விடாது. எழ - பிரகாசிக்க. விடம்கிளர்
- நஞ்சு மிகுந்த. படங்கொள் - படத்தைக் கொண்ட. அரவம் -
பாம்பின் (தலையில் உள்ள நாகரத்தினத்தினால்) மடங்கு - ஏனைய
ஒளிகள் மடங்கும்; ஒளிபடர்ந்திட -ஒளி பரவ, நடம்தரு - ஆடும்
விடங்கனது இடம் - பேரழகுடைய சிவபெருமானின் (இடமாவது)
தண் முகில் - குளிர்ச்சி பொருந்திய மேகங்கள். போய் - சென்று.
தடங்கடல் - அகன்ற கடலை. தொடர்ந்து - பற்றி (நீர் உண்டு).
உடன் - உடனே. நுடங்குவ - தவழ்வன. இடங்கொள - எல்லா
இடங்களும் கொள்ளும் படி. மிடைந்த - நெருங்கிய. குரலால் -
இடியின் ஓசையினால். கடுங்கல்லின் - விளக்கம் மிகுந்த
மலைச்சாரலிலே. முடங்கு -வளைவான. அளை - வளையிலே.
நுடங்கு அரவு - மெலிந்த பாம்பு. ஒடுங்கு - பதுங்குகின்ற;
கயிலாயமலை.
|