| 
       
	   
	   
         
          | 3354. | கோலமாய 
            நீண்மதிற் கூடலால வாயிலாய் |   
          |  | பாலனாய 
            தொண்டு செய்து பண்டுமின்று முன்னையே நீலமாய 
            கண்டனே நின்னையன்றி நித்தலும்
 சீலமாய சிந்தையில் தேர்வதில்லை தேவரே.     5
 |  
            5. 
        பொ-ரை: அழகிய நீண்ட மதில்களையுடைய கூடலில் விளங்கும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் பெருமானே!
 மார்க்கண்டேயர், சண்டேசுரர் போன்ற பாலர்கள் சிவபூசை செய்து
 பண்டைக் காலத்தும், இக்காலத்தும் வழிபட விளங்கும்
 நீலகண்டனே. தேவர்கள் உன்னையன்றிப் பிற தெய்வங்களைத்
 தமது தூயசிந்தையில் கொள்ளாதவராய் வாழ்கின்றனர்.
       கு-ரை: 
        பாலன் ஆய - சண்டேசுவர நாயனார் போன்ற. தொண்டு செய்து - வழிபாடு புரிந்து. ஆலவாயிலாய் - நீலம் ஆய
 கண்டனே. தேவர் நித்தலும் தொண்டு செய்து நின்னையே
 தேர்வதன்றிப் பிற தெய்வங்களைச் (சீலமாய சிந்தையில்)
 தேர்வதில்லை என முடிவுகொள்க.
 |