3646. |
என்றுமரி
யானயல வர்க்கிய |
|
லிசைப்பொருள்க
ளாகியெனதுள்
நன்றுமொளி யானொளிசி றந்தபொன்
முடிக்கடவு ணண்ணுமிடமாம்
ஒன்றியம னத்தடியர் கூடியிமை
யோர்பரவு நீடரவமார்
குன்றுகணெ ருங்கிவிரி தண்டலை
மிடைந்துவளர் கோகரணமே. 1 |
1.
பொ-ரை: சிவபெருமான் அடியார் அல்லாதவர்க்கு
எப்பொழுதும் காண்டற்கு அரியவன். இயற்றமிழும், இசைத்தமிழும்
ஆகி எனது உள்ளத்தில் நன்கு ஒளியாகி வீற்றிருப்பவன். பொன்
போன்று ஒளிரும் சடைமுடியுடைய அக்கடவுள் வீற்றிருந்தருளும்
இடமாவது, ஒன்றிய மனமுடைய அடியவர்களுடன் தேவர்களும்
கூடியிருந்து பரவுகின்ற குன்றுகளும், சோலைகளும் விளங்கும்
திருக்கோகரணம் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
அயலவர்க்கு - அடியார் அல்லாதவர்க்கு. என்றும்
அரியான் - எப்பொழுதும் காண்டற்கு அரியவன். (என்றும்) - என்
உள்ளத்தில். இயல் இசைப் பொருள்களாகி - இயற்றமிழ் இசைத்தமிழ்
நூல்களின் பயனாகி. நன்றும் ஒளியான் - சிறிதும் ஒளியாமல் நன்கு
விளங்குகின்றவன்.
ஒளிதந்த பொன்முடிக் கடவுள் - ஒளிபொருந்திய
பொன்மயமான சடாமுடியையுடைய சிவபெருமான், நண்ணும் இடமாம். ஒன்றியமனத்து அடியர் -
ஒருமுகப்பட்ட (கலையாத) மனத்தையுடைய அடியார்களோடு. இமையோர் பரவும் - தேவர்கள்
துதிக்கின்ற. நீடு
அரவமார் - பெரிய ஓசைமிக்க. குன்றுகள் நெருங்கி. தண்டலை -
சோலைகள். வளர் - வளர்கின்ற கோகரணம்.
|