3672. |
தேயுமதி
யஞ்சடையி லங்கிடவி |
|
லங்கன்மலி
கானிற்
காயுமடு திண்கரியி னீருரிவை
போர்த்தவனி னைப்பார்
தாயென நிறைந்ததொரு தன்மையினர்
நன்மையொடு வாழ்வு
தூயமறை யாளர்முறை யோதிநிறை
தோணிபுர மாமே. 5 |
5.
பொ-ரை: கலைகள் தேய்ந்து அழியும் நிலையிலிருந்த
சந்திரனைச் சடைமுடியில் தரித்து மீண்டும் விளங்கி ஒளிருமாறு
செய்தவர் சிவபெருமான். மலைகள் மிக்க காட்டில் திரிகின்ற
சினமுடைய, கொல்லும் தன்மையுடைய வலிய யானையின் தோலை
உரித்துப் போர்த்தவர். தம்மையே சிந்தித்திருப்பவர்கட்குத் தாயைப்
போலக் கருணை காட்டிப் பாதுகாப்பவர். எங்கும் நிறைந்த
தன்மையர். அடியவர்கட்கு நன்மை புரிதலையே தம் கடனாகக்
கொண்ட அப்பெருமானார் வீற்றிருந்தருளுகின்ற இடம்,
தூய்மையுடைய வேதியர்கள் வேதங்களை ஓதி நிறைகின்ற
திருத்தோணிபுரம் ஆகும்.
கு-ரை:
தேயும் - கலை தேய்ந்து வரும். மதியம் -
பிறைச்சந்திரன். (அம் சாரியை.) இலங்கிட- தன்னைச்சரண்புக்கதால்
விளங்க (இலங்கு+இடு+அ = இலங்கிட) இடு துணை வினை என்ப.
விலங்கல் - மலைகள். மலி - மிக்க. கானில் - வனத்தில். காயும் -
கோபிக்கின்ற. அடு - கொல்லவல்ல. திண் - வலிய. கரியின் -
யானையின். ஈர் உரிவை -உரித்ததோலைப் போர்த்தவன்.ஈர் உரிவை
- "அடியளந்தான் தாயது" எனல் போல்வது. நினைப்பார்-நினைப்பவருக்குத் தாயைப்போல
உதவ எங்கும் நிறைந்த ஒரு
தன்மையினர். நன்மையொடு வாழ்வு - நன்மைபுரிவதே தொழிலாக
வாழும் இடம். (முறையாக) ஓதி - வேதங்களையோதி, நிறைகின்ற
திருத்தோணிபுரம்.
|