| 
         
          | 3797. | துவருறு 
            விரிதுகி லாடையர் |   
          |  | வேடமில் 
            சமணரென்னும் அவருறு சிறுசொலை யவமென
 நினையுமெம் மண்ணலார்தாம்
 கவருறு கொடிமல்கு மாளிகைச்
 சூளிகை மயில்களாலத்
 திவருறு மதிதவழ் திருநெல்வேலி
 யுறை செல்வர் தாமே.                10
 |       10. 
        பொ-ரை: மருதந்துவரில் தோய்ந்த மஞ்சட் காவிஆடை அணியும் புத்தர்களும், வேடநெறி நில்லாத சமணர்களும் கூறுகின்ற
 புன்மொழிகளைப் பயனற்றன என்று நினையுங்கள். எம் தலைவராகிய
 சிவபெருமான், கண்டார் மனங்களைக் கவர்கின்ற, கொடி விளங்கும்
 மாளிகையின் நிலா முற்றத்தில் மயில்கள் நடமாட, அதனைக் காணத்
 தேவர்களும் வருகின்ற, சந்திரன் தவழ்கின்ற திருநெல்வேலியில்
 வீற்றிருந்தருளும் அருட்செல்வம் ஆவார். அவரை வழிபடுங்கள்.
       கு-ரை: 
        துவர் உறு - மருதந்துவரில் தோய்த்த, துகில் ஆடை - துகிலாகிய ஆடை. (இருபெயரொட்டுப்பண்புத்தொகை) ஆடையர் -
 புத்தர். வேடம் இல் - வேடநெறி நிற்றல் இல்லாத; சமணம். சிறு
 சொ(ல்)லை - புன்மொழிகளை, அவம் - பயனற்றது, நினையும் -
 (நினையுங்கள்) ஏவற்பன்மை, எம் அண்ணலார் தாம் திருநெல்வேலியுறை செல்வராவார். 
        அவரையடைந்து உய்யுங்கள்
 என்பது குறிப்பெச்சத்தாற் பெறவைத்தார். கவர்உறு - கண்டார்
 மனங்களைக் 
        கவர்கின்ற மாளிகை சூளிகை, மேல் வீட்டில் ஓர்
 உறுப்பு, மயில்கள் ஆட - அதனைக் காண்பதற்கு, திவர் -
 தேவர்கள், (திவ் - தேவலோகம்) உறு - அடையும் (திருநெல்வேலி)
 மாளிகைகளில் மதி தவழும் (திருநெல்வேலி).
 |