3965. அன்று முப்புரஞ் செற்ற வழகநின்
  துன்று பொற்கழல் பேணா வருகரைத்
தென்ற வாதுசெ யத்திரு வுள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே
     ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
     ஆல வாயி லுறையுமெம் மாதியே.        10

     10. பொ-ரை: சினந்து பேசும் இயல்புடைய சமண,
புத்தர்களால் காணஇயலாத தலைவரே! முன்னொரு காலத்தில்
முப்புரங்களை எரித்த அழகரே! உம்முடைய பொன்போன்ற
திருவடிகளைப் போற்றாத சமணர்கள் தோற்றோட வாதம் செய்ய,
உமது திருவுள்ளம் யாது? அழகிய ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம்
ஆதிமூர்த்தியே! உலகனைத்தும் உம் புகழே மிக வேண்டும்.
திருவருள் புரிவீராக!

     கு-ரை: தென்ற. கன்ற - கோபிக்கின்ற.