| 
         
          | 3971. | மதுசூதன் 
            நான்முகன் வணங்கரியார் |   
          |  | மதியது 
            சொல்லிய மயேந்திரரும் கதிர்முலை புல்கிய கயிலையாரும்
 அதியனா ரூராதி யானைக்காவே.             5
 |       5. 
        பொ-ரை: மது என்ற அசுரனைக் கொன்றவனாகிய திருமாலும், பிரமனும் வணங்குதற்கு அரியராய் விளங்குபவர்
 சிவபெருமான். ஆகமங்களை உபதேசித்தருளிய திருமகேந்திர
 மலையில் வீற்றிருந்தருளுபவர். ஒளி பொருந்திய
 கொங்கைகளையுடைய உமாதேவியைத் தழுவிய திருக்கயிலைநாதர்.
 எவர்க்கும் மேம்பட்டவர். திருவாரூரில் வீற்றிருந்தருளுபவர். அவரே
 ஆதியாகிய திருவானைக்காவில் வீற்றிருந்தருளுகின்றார்.
       கு-ரை: 
        மது சூதனன் - மது என்னும் அசுரனைக் கொன்றவனாகிய திருமால் வணங்கரியார். (வணங்க + அரியார்).
 மதியது சொல்லிய மயேந்திரரும் - ஆகமங்களை உபதேசித்தருளிய
 மகேந்திர மலையில் எழுந்தருளியிருப்பவரும். அது மன்னுமாமலை
 மகேந்திர மதனில் சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்
 (திருவாசகம் கீர்த்தித் திருவககல். அடி 9 - 10.) கதிர் முலை
 புல்கிய - ஒளிபொருந்திய 
        தனபாரங்களை உடைய உமாதேவியார்
 ழுவிய. அதியன் - எவர்க்கும் மேம்பட்டவனாகிய சிவபெருமான்.
 யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான் என்பது திருவாசகம்.
 அதியன், வடசொல் அடியாகப் பிறந்த பெயர்ப்பகுபதம்.
 |