| 
         
          | 3981. | துங்கமாகரி 
            பங்கமாவடுஞ் |   
          |  |      செங்கையானிகழ் 
              வெங்குருத்திகழ்அங்கணானடி 
              தங்கையாற்றொழத்
 தங்குமோ வினையே.                  4
 |       4.பொ-ரை:உயர்ந்ததும், 
        பெரியதுமான யானை துன்புறும்படி கொன்று அதன் தோலையுரித்த சிவந்த கைகளையுடையவனும், 
      புகழுடன் விளங்கும் 
        திருவெங்குரு என்னும் திருத்தலத்தில்
 வீற்றிருந்தருளுகின்ற அழகிய கண்களை உடையவனுமான
 சிவபெருமான் திருவடிகளைத் தங்கள் கைகளால் தொழுபவர்களிடம்
 வினைகள் தங்கா.
       கு-ரை: 
        துங்கம் - உயர்வு. பங்கம் ஆ - துன்புறும்படி. அடும் - கொன்று தோலை உரித்த. நிகழ் - பொருந்திய.
 வெங்குருத்திகழ் அங்கணான் - வெங்குரு என்னும் தலத்தில்
 விளங்குகின்ற சிவபெருமானது.
 |