4016. |
உடன்பயில்
கின்றனன் மாதவனே |
|
உறுபொறி
காய்ந்திசை மாதவனே
திடம்பட மாமறை கண்டனனே
திரிகுண மேவிய கண்டனனே
படங்கொ ளரவரை செய்தனனே
பகடுரி கொண்டரை செய்தனனே
தொடர்ந்த துயர்க்கொரு நஞ்சிவனே
தோணி புரத்துறை நஞ்சிவனே. 5 |
5.
பொ-ரை: இறைவனே! திருமாலைத் தம்முடன்
இடப்பாகத்தில் இருக்கும்படி செய்கின்றவர். தம்வழிச் செல்லும்
இயல்புடைய இந்திரியங்களை அடக்கும் பெரிய தவம் செய்தவர்.
உறுதி பயக்கும் சிறந்த வேதங்களை அருளியவர். முக்குண
வயப்பட்டுச் செய்த புறச்சமயக் கொள்கைகளைக் கண்டனம்
செய்பவர். படமெடுக்கும் பாம்பை இடுப்பில் அணிந்தவர்.
யானையின் தோலை உரித்து அதைக் கொன்றவர். தொடர்ந்த
துன்பங்களை அழிப்பதில் இவர் விடம் போன்றவர். இவரே
திருத்தோணிபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் நம்
சிவபெருமான் ஆவார்.
கு-ரை:
உடன் பயில்கின்றனன் மாதவன் - தம்மோடு
கூடவேயிருக்கும் பேறுடையவன் திருமால். ஏனெனில், உறு - தம்
வழியிற் செல்லுகின்ற. பொறி - இந்திரியங்களை. காய்ந்து இசை -
கோபித்து மடக்கிச் செலுத்திய. மாதவன் - பெருந்
தவஞ்செய்தோனாதலினால் பொறிகளை யடக்குதல் அவற்கு ஆகும்
என்க. சென்ற விடத்தாற் செலவிடா தீது ஒரீஇ நன்றின்பால்
உய்ப்பது அறிவு என்னும் திருக்குறள் கொண்டு அறிக. திடம்பட -
உறுதிப்பாடு அமைய. மாமறை - சிறந்த வேதங்களை. கண்டனன் -
செய்தருளியவர். வேதத்தையருளியவரும் சிவபெருமானேயென்பது.
இதனை உம்பரின் நாயகன் திருவாக்கிற் பிரணவம் உதித்தது,
அதனிடை வேதம் பிறந்தன என்னும் திருவிளையாடற் புராணத்தால்
அறிக. (வேதத்துக்கு 804). திரிகுணம் மேவிய - முக்குண வயப்
பட்டுச் செய்தனவாகிய புறச்சமயக் கொள்கைகளை. கண்டனன் -
கண்டனம் செய்வோன். படங்கொள் அரவு, அரை செய்தனனே -
அரையிலணிந்தவன். பகடு - யானையின். உரிகொண்டு -
தோலையுரித்து. அரை செய்தனன் - அதை அழித்தவன். (தொடர்ந்த)
துயர்க்கு - துன்பங்களுக்கு. ஒரு நஞ்சு இவனே - ஒருவிடம்போல்
நின்று அழிப்பவன் இவனே. பிற தெய்வங்கள் வேதனைப்படும்,
இறக்கும், மேல் வினையும்
|