4055. |
கஞ்சியைக்
குலவு கையரே |
|
கலக்கமா
ரமணர் கையரே
அஞ்ச வாதிலருள் செய்யநீ
யணைந்திடும் பரிசு செய்யநீ
வஞ்சனே வரவும் வல்லையே
மதித்தெ னைச்சிறிதும் வல்லையே
வெஞ்ச லின்றிவரு வித்தகா
மிழலைசே ரும்விறல் வித்தகா. 10 |
10.
பொ-ரை: சிவபெருமானே! கஞ்சி உண்ணும் கையையுடைய
பௌத்தர்களும், சமணர்களும் அஞ்சுமாறு, அடியேன் வாதில் வெற்றி
கொள்ள அருள்செய்தீர் நீவிர். பிறர் செய்யும் சூழ்ச்சியை அறிய
வல்லீரும் நீவிர். அடியவரின் துயர் நீக்கிட வருவதற்கு வல்லீர். நீவிர் என் உரையைச்
சிறிதளவேனும் மதித்து விரைவில் வரவும்
இல்லையே. குறைதலில்லாமல் மேன்மேலும் வருகின்ற இத்துயரங்கள்
எனக்குத் தகா. திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும்
வலிமை மிக்க வித்தகரே.
கு-ரை:
கஞ்சியை - கஞ்சியை. குலாவு - கொண்டாடிப் பற்றிய.
கையர் - கையையுடையவர்களாகிய புத்தர். கஞ்சி தானியாகு பெயர்.
கையர் - வஞ்சகர்.வாதில் அஞ்ச அருள் - வாதில் தோற்று அஞ்ச
அருளிய. செய்ய - செய்யோனாகிய நீ. அணைந்திடும் பரிசு செய்யத்
தழுவும் சூழ்ச்சி, செய்வதை நீ வஞ்சனே - நீக்கும் வஞ்சகனே.
(வினைத்தொகை). எனைச் சிறிதும் - சிறிதளவேனும், மதித்து
வல்லையே - விரைவில் வரவும் வல்லையே. வருவீரா, அடியருக்கு
பகைவர் அஞ்ச - அடியருக்கு அருளும் செவ்வியோனாகிய நீ
காமன்அஞ்சுமாறு எனக்கும் அருளுவை என்பாள் (செய்ய-) நடு
நிலைமையோன் ஆகிய நீ என்றாள். எஞ்சல் இன்றி - குறைதல்
இல்லாமல். வரு - மேன்மேலும் வருகின்ற. இவ் - இத்துயரங்கள்,
தகா - எனக்குத் தகா. (இவ்+தகா=இத்தகா) என்றாயிற்று. புறனடைச்
சூத்திர விதியால் உ - ம் பூசனை ஈசனார்க்குப் போற்ற இக்
காட்டினோம் (இவ் + காட்டினோமே என்னும் திருநேரிசை) வித்தகா
- சதுரப்பாட்டை உடையவனே! அவிஎனல் ஆகாதோ?
|