| 
         
          | 4080. | இசைந்தவா 
            றடியா ரிடுதுவல் வானோ |   
          |  | ரிழுகுசந் 
            தனத்திளங் கமலப் பசும்பொன்வா சிகைமேற் பரப்புவாய் கரப்பாய்
 பத்திசெய் யாதவர் பக்கல்
 அசும்புபாய் கழனி யலர்கயன் முதலோ
 டடுந்தரிந் தெடுத்தவான் சும்மை
 விசும்புதூர்ப் பனபோல் விம்மிய வீழி
 மிழலையா னெனவினை கெடுமே.        2
 |  
             2. 
        பொ-ரை: அடியவர்கள் பக்திப் பெருக்குடன் மலர்தூவிப் போற்றவும், தேவர்கள் நறுமணம் கமழும் பொற்றாமரை
 மாலைகளைச் சாத்தவும் அவர்கட்கு அருள்வாய். பக்தி
 செயாதவர்கட்கு ஒளிந்திருப்பாய். ஊற்று நீர் பாயும் கழனிகளில்
 மலர்களும், கயல்களும் திகழ, அரிந்த கதிர்களிலிருந்து தூற்றும்
 நல்லானது வானத்திலிருந்து உதிர்வன போன்று வளமுடன்
 விளங்குவது திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும். அங்கு
 வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருநாமத்தை ஓத வினை
 யாவும் நீங்கும்.
       கு-ரை: 
        துவல் - (தூவல் என்பதன் விகாரம்) மலர் - அடியார் இடும் தூவல்.
 |