|  
       
         
          | 4120. | விளைதரு 
            வயலுள் வெயில்செறி பவள |   
          |  | மேதிகண் 
            மேய்புலத் திடறி ஒளிதர மல்கு மோமமாம் புலியூ
 ருடையவர் வடதளி யரனைக்
 களிதரு நிவப்பிற் காண்டகு செல்வக்
 காழியுண் ஞானசம் பந்தன்
 அளிதரு பாடல் பத்தும்வல் லார்க
 ளமரலோ கத்திருப் பாரே.             11
 |        11. 
        பொ-ரை: நல்ல விளைச்சலைத் தருகின்ற வயல்களில் ஒளிமிக்க பவளங்கள், எருமைகள் மேய்கின்ற இடங்களில்
 அவைகளால் இடறப்பட்டு மேலும் ஒளியைத் தருகின்ற திருஓமமாம்
 புலியூரில் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலில்
 வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை, களிப்பை உண்டாக்கும்
 உயர்ந்த காணத்தக்க செல்வத்தையுடைய சீகாழிப்பதியில் அவதரித்த
 திருஞானசம்பந்தர் போற்றிய, அருளை விளைவிக்கும் இத்திருப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள் 
        சிவலோகத்தில்
 வீற்றிருப்பர்.
       கு-ரை: 
        களிதரு நிவப்பிற்காண்டகு செல்வம் - களிப்பை உண்டாக்கத் தக்க மிகுந்த காணத்தக்க செல்வம்.
 |