4129. |
நின்றுணஞ்
சமணுமிருந்துணுந் தேரு |
|
நெறியலா
தனபுறங் கூற
வென்றுநஞ் சுண்ணும் பரிசின ரொருபான்
மெல்லிய லொடுமுட னாகித்
துன்றுமொண் பௌவ மவ்வலுஞ் சூழ்ந்து
தாழ்ந்துறு திரைபல மோதிக்
குன்றுமொண் கானல் வாசம்வந் துலவுங்
கோணமா மலையமர்ந் தாரே. 10 |
10.
பொ-ரை: நின்றுண்ணும் சமணர்களும், இருந்துண்ணும்
புத்தர்களும் சிவபெருமானைப் பற்றி நெறியல்லாதவனவற்றைப்
புறங்கூறுகின்றனர். சிவபெருமானோ நஞ்சுண்டு தேவர்களைக் காத்த
பெருமையுடையவர். மெல்லியலான உமாதேவியை ஒரு பாகமாகக்
கொண்டவர். கடல் சூழ்ந்த அம்மலையில் மணம் வீசும் மல்லிகைச்
சோலை விளங்கக் கடலலைகள் கரையில் மோதுகின்றன.
கடற்சோலைகளின் மணம்வீசும் திருக்கோணமலையில் சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
சமணர் நின்றுண்பவர். புத்தர் - இருந்துண்பவர்.
எம்பெருமான் நஞ்சுண்பவர் என்பது ஓர் நயம்.
|