| 
       
         
          | 4155. | எண்ணா 
            தஅரக் கனுரத் தைநெரித்துப் |   
          |  | பண்ணார் 
            தருபா டலுகந் தவர்பற்றாங் கண்ணார் விழவிற் கடிவீ திகள்தோறும்
 விண்ணோர் களும்வந் திறைஞ்சும் விடைவாயே. 8
 
 |       8. 
        பொ-ரை: தம்மை மதியாத இராவணனது வலிமையைக் கெடுத்து, பின் அவன் பண்ணோடு யாழிசை கூட்டிப் பாடிய பாடல்
 கேட்டு உகந்த சிவபெருமானது இடம், இடமகன்ற வீதிகள் தோறும்
 திருவிழாக் காலங்களில் விண்ணவர்களும் வந்திறைஞ்சும்
 சிறப்பினதாகிய திருவிடைவாய் என்பர்.
 |