2817. |
வாணி
லாமதி போல்நுத லாள்மட |
|
மாழை யொண்க ணாள்வண்ட ரளந்நகை
பாணி லாவிய இன்னிசை யார்மொழிப் பாவையொடும்
சேணி லாத்திகழ் செஞ்சடை யெம்மண்ணல்
சேர்வ துசிக ரப்பெருங் கோயில்சூழ்
போணி லாநுழை யும்பொழிற் பூந்தராய் போற்றுதுமே. 6 |
6.
பொ-ரை: ஒளி பொருந்திய பிறைச்சந்திரனைப் போன்ற
நெற்றியையும், மாம்பிஞ்சு போன்ற ஒள்ளிய கண்களையும் வளமான
முத்துக்களைப் போன்ற பற்களையும், பாட்டில் விளங்குகின்ற இனிய
இசைபோன்ற மொழியினையும் உடைய பாவையாகிய உமா
தேவியோடு, வானில் விளங்கும் நிலவு திகழ்கின்ற சிவந்த
சடையையுடைய எங்கள் தலைவனான சிவபெருமான் விரும்பி
எழுந்தருளியுள்ள இடமாவது, உயர்ந்த சிகரத்தையுடைய பெருங்
கோயிலைச் சூழ்ந்து பிறைச்சந்திரன் நுழையும் சோலைகளையுடைய
திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக!
கு-ரை:
வாணிலா மதிபோல் நுதலாள்-ஒளிபொருந்திய
நிலவினை வீசுகிற பிறைச்சந்திரனையொத்த நெற்றியை யுடையவளும்,
மடமாழை ஒண்க(ண்)ணாள்-மாம்பிஞ்சு போன்ற ஒள்ளிய
கண்களையுடையவளும், வண்தரளநகை-வளம்பொருந்திய
முத்துப்போன்ற பற்களையும், பாண்நிலாவிய-பாட்டின்கண்
விளங்குகின்ற, இன்இசைஆர்மொழி-இனிய இசைபோன்ற
மொழியையுமுடைய பாவை போன்றவள், மதிநுதலாளும், கண்ணினாளும், பாவையுமாகிய அம்பிகைஎன
இயையும்.
சேண்-வானம், வானத்தில் இயங்கும்நிலா-உருபும் பயனுந் தொக்க
தொகை. போழ்-பிளவு; கூறிடுதல். வட்டமான ஒரு பொருளைச்
சரிகூறிட்டால் பிறை-வடிவு தோன்றுதலின், அதனைப் பிறைக்கு
உவமை கூறுவர். போழிளங்கண்ணியினானை என்ற அப்பர்
வாக்கில் உவமையாகு
|