2819. |
காசை
சேர்குழ லாள்கயல் ஏர்தடங் |
|
கண்ணி
காம்பன தோள்கதிர் மென்முலைத்
தேசு சேர்மலை மாதம ருந்திரு மார்பகலத்
பெயராய்ப் பிறையையுணர்த்தலும் காண்க.
தீசன் மேவும் இருங்கயி லையெடுத்
தானை அன்றடர்த் தானிணைச் சேவடி
பூசை செய்பவர் சேர்பொழிற் பூந்தராய் போற்றுதுமே. 8 |
8. பொ-ரை:
காயாம்பூப் போன்ற கருநிறமுடைய
கூந்தலையும், கயல்மீன் போன்ற அழகிய அகன்ற கண்களையும்,
மூங்கில் போன்ற தோள்களையும், கதிர்வீசும் மென்மை வாய்ந்த
கொங்கைகளையும், உடைய
ஒளி பொருந்திய மலைமகளான
உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட அழகிய அகன்ற
மார்பினையுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ளதும் பெரிய கயிலை
மலையினைப் பெயர்த்தெடுத்த இராவணனை அந்நாளில் அடர்த்த
அச்சிவனின் சேவடிகள் இரண்டினையும் வழிபடுகிறவர்கள் வந்து
சேர்கின்றதும், ஆகிய சோலைகள் சூழ்ந்த திருப்பூந்தராய் என்னும்
திருத்தலத்தை நாம் வணங்குவோமாக!
கு-ரை:
காசை-காயாம்பூ; நீலநிறமுடைமையால் இது குழலுக்கு
உவமை கூறப்பட்டது. கயல்ஏர்தடங்கண்ணி-மீனைப்போன்ற அழகிய
அகன்ற கண்களையுடையவள். காம்பு அ(ன்)னதோள்
கதிர்மென்முலை-மூங்கில் போன்ற தோளையும் கதிர்வீசும் மெல்லிய
தனங்களின் ஒளியையுமுடைய. மலைமாது-இமைய அரையன்
புதல்வியாகிய அம்பிகை. மார்பு அகலம்-இருபெயரொட்டுப் பண்புத்
தொகை. அமரும்-தங்கும். மார்பு அகலத்து ஈசன் மேவும்.
இரும்-பெரிய.
|