2828. |
அடையரி
மாவொடு வேங்கையின்றோல் |
|
புடைபட அரைமிசைப் புனைந்தவனே
படையுடை நெடுமதிற் பரிசழித்த
விடையுடைக் கொடிமல்கு வேதியனே
விகிர்தாபரமா நின்னை விண்ணவர் தொழப்புகலித்
தகுவாய்மட மாதொடுந் தாள்பணிந் தவர்தமக்கே.
6 |
6.
பொ-ரை: சிங்கத்தின் தோலைப் போர்த்து, புலியின் தோலையும்
உடம்பில் பொருந்துமாறு இடையில் அணிந்துள்ளவனே!
படைக்கருவிகளைக் கொண்ட நீண்ட மதில்களையுடைய திரிபுரத்தின்
வலிமையை அழித்தவனே! இடபக் கொடியுடைய வேத நாயகனே!
விகிர்தனே! எப்பொருட்கும் மேலானவனே! விண்ணோர்களும் தொழத்
திருப்புகலியிலே உமாதேவியோடு வீற்றிருந்து உன் திரு வடிகளை
வணங்கும் அனைவர்க்கும் அருள்புரிகின்றாய்.
கு-ரை:
அரிமாவோடு-சிங்கத்தின் தோலோடு, வேங்கையின் தோல்
புடைபட-பக்கம்பொருந்தும்படி, அரைமிசைப் புனைந்தவனே-இடுப்பில்
அணிந்தருளியவரே. படையுடை நெடுமதில்-சேனைகளையுடைய நெடிய
திரிபுரம். பரிசு அழித்த-திறன்களைத் தொலைத்த. விகிர்தா-
வேறுபட்டவனே. பரமா-மேலானவனே. நின்னை ... தாள் பணிந்தவர்
தமக்கே-நும்மை விண்ணவர்தொழத்தாள் பணிந்தவர்களாகிய
அவர்களுக்குப் புகலியின்கண் அம்பிகை சமேதராய்க் காட்சி
கொடுக்கத்தக்கவராகி யிருப்பீர்.
|