2831. உருகிட உவகைதந் துடலினுள்ளால்
  பருகிடும் அமுதன பண்பினனே
பொருகடல் வண்ணனும் பூவுளானும்
பெருகிடும் அருள்எனப் பிறங்கெரியாய்
     உயர்ந்தாய்இனி நீஎனை ஒண்மலரடி யிணைக்கீழ்
     வயந்தாங் குறநல் கிடுமதிற் புகலிமனே.   9    

       9.பொ-ரை:உள்ளமும், உடலும் உருக உன்னைப் போற்றும்
அடியவர்கட்குச் சிவானந்தம் அளிக்கும் அமுதம் போன்ற இனிமை
வாய்ந்தவனே! கடல் போன்ற நீலநிறமுடைய திருமாலும், தாமரை
மலரில் வீற்றிருக்கும் பிரமனும் அடிமுடி காணாதபடி நெருப்பு
மலையாய், உன்னுடைய பெருகும் அருளென உயர்ந்து நின்றாய்.
மதில்களையுடைய திருப்புகலியில் வீற்றிருக்கும் இறைவனே! நீ
என்னை உன் ஒளி பொருந்திய திருவடியிணைக்கீழ் விரும்பி
வீற்றிருக்கும்படி

     கு-ரை: உருகிட உவகை தந்து உடலின் உள்ளால் பருகிடும்
அமுது அ(ன்)ன பண்பினனே-என்பதனை “அனைத்து எலும்பு
உள்நெக ஆநந்தத் தேன்சொரியும் குனிப்புடையானுக்கே சென்று
ஊதாய் கோத்தும்பீ” என்ற திருவாசகத்தோடு ஒப்பிடுக. கடைசி
இரண்டு அடிக்கும், திருமாலும் பிரமனும் (தம்முட்கொண்ட)
பெருகிய செருக்கு எவ்வளவு பெரியதாய் உயர்ந்திருந்ததோ அவ்வளவு பெரியதாகிய ஒளிப்பிழம்பாய் உயர்ந்தருளியவரே!
வயந்து-விரும்பி. மலரடியிணைக்கீழ் ஆங்குற. நல்கிடு-அருள்
புரிவீராக.