2836. |
நனவினும்
கனவினும் நம்பாஉன்னை |
|
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 3 |
3.
பொ-ரை: கங்கையையும், நறுமணம் கமழும்
கொன்றையையும் அணிந்து கனன்று எரிகின்ற நெருப்பைக்
கையிலேந்தி யுள்ளவனே! அனைவரின் நம்பிக்கைக்கும்,
விருப்பத்திற்குமுரிய உன்னை நனவிலும், கனவிலும், மனம் ஒன்றி
வணங்குவதற்கு மறந்திலேன். இத்தகைய என்னை நீ
ஆட்கொள்ளுமாறு இதுவோ? திருவாவடுதுறையில்
எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! (உலக நன்மைக்காகத் தந்தை
செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவையான பொருளை
எனக்குத் தாராவிடில், அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா?
கு-ரை:
மூன்றாம் அடிக்குப் புனலையும் விரிந்த நறு
மணமுடைய கொன்றைப் பூவையும் அணிந்த என்க. கனல் எரி
அனல் புல்கு கையவனே-சுடுகின்ற பற்றி யெரிவதான நெருப்புத்
தங்கிய திருக்கரங்களையுடையவனே.
|