2844. |
அலைபுனல்
ஆவடு துறைஅமர்ந்த |
|
இலைநுனை வேற்படை யெம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர்நிலிமிசை நிலையிலரே. 11 |
11.
பொ-ரை: அலைகளையுடைய காவிரிவளம் பொருந்திய
திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் இலை போன்ற நுனியையுடைய
திரிசூலப் படையேந்திய எம் இறைவனைப் பற்றி உலக நலன்களை
விரும்பிய ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய அருந்தமிழ்
மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் வினையாவும்
நீங்கப்பெற்று விரிந்த விண்ணுலகில் நிலையாக வீற்றிருப்பர். துன்பம்
தரும் இம்மண்ணுலகில் மீண்டும் வந்து பிறவார்.
கு-ரை:
இலைநுனி வேற்படை - இலைபோன்ற
நுனியையுடைய திரிசூலம்; "இலைமலிந்த மூவிலைய சூலத்தினானை"
என்புழியும் (திருமறை7) காண்க. 'விலையுடை அருந்தமிழ்மாலை'
இப்பதிகம். தந்தையார் பொருட்டுப் பொன்பெறுவது. ஈவது ஒன்று
எமக்கு இல்லையேல் எனப்பாடினமையால் இங்ஙனம்
விலையுடையருந்தமிழ்மாலை எனப்பட்டது.
|