| 
         
          | 2850. | பூதம் 
            சூழப் பொலிந்தவன் பூந்தராய் |   
          |  | நாதன் 
            சேவடி நாளும் நவின்றிட நல்கும் நாள்தொறும் இன்பம் நளிர்புனல்
 பில்கு வார்சடைப் பிஞ்ஞ கனே.         6
 |  
            6. பொ-ரை: 
        திருப்பூந்தராய் என்னும் தலத்தில் பூதகணங்கள் சூழ விளங்கும் தலைவனாகிய சிவபெருமானின் திருவடிகளை
 எந்நாளும் போற்றி வணங்க, குளிர்ந்த கங்கைநீர் சொட்டுகின்ற
 நீண்ட சடைமுடியுடைய அப்பெருமான் நமக்கு நாள்தோறும்
 பேரின்பம் அருளுவான்.
       கு-ரை: 
        நளிர்புனல் பில்குவார் சடைப்பிஞ்ஞகன் - குளிர்ந்த கங்கை நீர் சொட்டும் நெடிய சடையில் மயிற்பீலியை
 யணிந்தவனாகிய சிவபெருமான்.
 |