2852. |
போத
கத்தூரி போர்த்தவன் பூந்தராய் |
|
காத
லித்தான் கழல்விரல் ஒன்றினால்
அரக்கன் ஆற்றல் அழித்தவ னுக்கருள்
பெருக்கி நின்றஎம் பிஞ்ஞ கனே. 8 |
8.
பொ-ரை: யானையின் தோலை உரித்துப் போர்த்தித்
திருப்பூந்தராய் என்னும் தலத்தில் விரும்பி எழுந்தருளியுள்ள எனது
பிஞ்ஞகனாகிய சிவபெருமானே தனது திருவடி விரல் ஒன்றினால்
அரக்கனது ஆற்றலை அழித்துப் பின்னர் அவனுக்கு அருள்
செய்தான்.
கு-ரை:
போதகம் - யானை. பூந்தராய் காதலித்தான் -
திருப்பூந்தராயை இருப்பிடமாக விரும்பினவன். அரக்கன் ஆற்றல்
அழித்து அவனுக்கே மீள அருளும் பெருக்கி நின்ற கடவுளே
பூந்தராய் காதலித்தவன்.
|