2853. |
மத்தம்
ஆனஇருவர் மருவொணா |
|
அத்தன்
ஆனவன் மேவிய பூந்தராய்
ஆளதாக அடைந்துய்ம்மின் நும்வினை
மாளு மாறருள் செய்யுந் தானே.
9 |
9.
பொ-ரை: தாமே தலைவர் என்று செருக்குக் கொண்ட
திருமாலும், பிரமனும், அறிந்து அடைய முடியாது உயர்ந்து விளங்கிய
சிவபெருமான் எழுந்தருளிய திருப்பூந்தராய் என்னும் தலத்தை
அவனுக்கு ஆட்படும்படி அடியவராய்ச் சென்று சேர்ந்து மேல்
நிலையை அடையுங்கள. அவன் தானே வந்து உங்கள் வினைகள்
அழியுமாறு அருள்புரிவான்.
கு-ரை:
மத்தம் - மயக்கம்; செருக்கு. இருவர் - தொகைக்
குறிப்பு. நீங்கள் ஆள்(அது) ஆக அடையுங்கள். அவன்தானே வந்து
உம்மைத் தலையளித்து உம்வினை மாளுமாறு அருள்செய்யும்.
|