2858. |
குலையி
னார்தெங்கு சூழ்கொள்ளம் பூதூர் |
|
விலையி
லாட்கொண்ட விகிர்தனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே. 3 |
3. பொ-ரை:
குலைகளோடு கூடிய தென்னை மரங்கள்
சூழ்ந்த திருக்கொள்ளம்பூதூரில், விலை கொடுத்து வாங்கிய
பொருளைப் போன்ற அருமையுடன் என்னை ஆட்கொண்ட
விகிர்தனாகிய உன்னைத் தியானிக்க இந்த ஓடமாவது ஆற்றைக்
கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக. நம்பனே!
மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும்
உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.
கு-ரை:
குலையின் ஆர்தெங்கு - குலையினால் நிறைந்த
தென்னை. விலையில் ஆட்கொண்ட விகிர்தன் - விலைகொடுத்துப்
பெற்ற பொருளைப் போல் என்னை ஆட்கொண்டருளியவன்.
அதாவது "இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள்
ஒற்றிவையென்னின் அல்லால் விருந்தினனேனை விடுதி கண்டாய்"
(திருவாசகம் 122) என்றபடியாம். ஆகவே "நன்றே செய்வாய் பிழை
செய்வாய் நானோ இதற்கு நாயகமே" என்றபடி தன்வயமிழந்து
கூறினபடியாம்.
|