2859. |
குவளை
கண்மல ருங்கொள்ளம் பூதூர்த் |
|
தவள
நீறணி தலைவனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே. 4 |
4.
பொ-ரை: பெண்களின் கண்களைப் போன்று குவளை
மலர்கள் மலர்ந்துள்ள திருக்கொள்ளம்பூதூரில் வீற்றிருக்கின்ற
திருவெண்ணீறு அணிந்துள்ள தலைவனான சிவபெருமானைத்
தியானிக்க இந்த ஓடமானது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத்
தானே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து
மகிழும் அடியவர்கள். புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில்
கண்டு வழிபட அருள்புரிவாயாக.
கு-ரை:
குவளைகள், கண்களைப்போல மலரும் - கொள்ளம்
பூதூரில் வெண்மையான நீறுபூசிய தலைவன்.
|