2860. |
கொன்றை
பொன்சொரி யுங்கொள்ளம் பூதூர் |
|
நின்ற
புன்சடை நிமலனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே. 5
|
5.
பொ-ரை: கொன்றை மரமானது பொன்னிறப் பூக்களை
உதிர்க்கின்ற திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியுள்ள நிமலனைத்
தியானிக்க இந்த ஓடமானது ஆற்றைக் கடக்கத் தனக்குத் தானே
தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும்
உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட
அருள்புரிவாயாக.
கு-ரை:
கொன்றை மரங்கள் மஞ்சள் நிறமான மலர்களை
யுதிர்ப்பது பொன்சொரிவது போற் காணப்படுகின்றது.
|