2861. |
ஓடம்
வந்தணை யுங்கொள்ளம் பூதூர் |
|
ஆடல்
பேணிய அடிகளை யுள்கச் |
|
செல்ல
வுந்துக சிந்தை யார்தொழ |
|
நல்கு
மாறருள் நம்பனே. 6 |
6.
பொ-ரை: திருநடனம் செய்யும் தலைவனான
சிவபெருமானைத் தியானிக்க ஓடமானது திருக்கொள்ளம்பூதூர்
என்னும் தலத்தினை அடையும்படி ஆற்றைக் கடக்கத் தானாகவே
தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும்
அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட
அருள்புரிவாயாக.
கு-ரை:
பதிகம் முற்றுப்பெறு முன்னமே ஓடம் கொள்ளம்
பூதூரையடைந்து விட்டதாதலால் ஓடம் வந்தணையும் கொள்ளம்
பூதூர் என்று அருளினார்.
|