2863. குரக்கி னம்பயி லுங்கொள்ளம் பூதூர்
  அரக்க னைச்செற்ற ஆதியை யுள்கச்
     செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
     நல்கு மாறருள் நம்பனே.               8

     8. பொ-ரை: குரங்குக் கூட்டங்கள் மரங்களில் ஆடிக்
குதிப்பதால் உண்டாகும் ஒலி நிறைந்த திருக்கொள்ளம்பூதூரில்
எழுந்தருளியிருக்கின்றவனும், இராவணனை மலையின் கீழ்
நெருக்கியவனுமான ஆதிமுதல்வனான சிவபெருமானைத் தியானிக்க
இந்த ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால்
உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத்
திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.

     கு-ரை:குரக்கினம் - குரங்குக்கூட்டம். சிலப்பதிகாரம் போன்ற
தொடர். நிலைமொழி மெல்லெழுத்து வல்லெழுத்தாயிற்று. செற்ற -
கோபித்த. ஆதிமுதல்வன்.