2864. பருவ ரால்உக ளுங்கொள்ளம் பூதூர்
  இருவர் காண்பரி யான்கழ லுள்கச்
     செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
     நல்கு மாறருள் நம்பனே.               9

     9. பொ-ரை: பருத்த வரால்மீன்கள் துள்ளுகின்ற
திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியிருக்கின்ற, திருமாலும், பிரமனும்
காண்பதற்கு அரியவனாய் நின்ற சிவபெருமானின் திருவடிகளைத்
தியானிக்க இந்த ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக. நம்பனே!
மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும்
உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.

     கு-ரை: பருவரால் - பருத்த வரால் மீன்கள். உகளும் -
துள்ளும்.