2865.
|
நீர
கக்கழ னிக்கொள்ளம் பூதூர்த் |
|
தேர
மண்செற்ற செல்வனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே. 10 |
10,
பொ-ரை: நீர்வளம் மிக்க வயல்களையுடைய
திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியுள்ளவனாய், புத்தர்களும்,
சமணர்களும் பகைத்துப் பேசும் செல்வனான சிவபெருமானைத்
தியானிக்க இந்த ஓடம் தானே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால்
உன்னைச் சிந்தித்து மகிழும் அடியார்கள் புறத்தேயும் உன்னைத்
திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.
கு-ரை:
நீர் அகம் - நீரைத்தன்னிடத்தே உடைய. நீரகக்கழனி
என்றதால் கொள்ளம் பூதூரின் நீர் வளம், நில வளம் இரண்டையும் புலப்படுத்தினார்.
தேர் அமண் - தேரரும் அமணரும், தேரர் -
சாக்கியர், அமணர் - சமணர் உம்மைத்தொகை.
|