2875. |
பொன்னிற
நான்முகன் பச்சையான் என்றிவர் |
|
புக்குழித்
தன்னையின் னானெனக் காண்பரி யதழற்
சோதியும்
புன்னைபொன் றாதுதிர் மல்குமந் தண்புக
லிந்நகர்
மின்னிடை மாதொடும் வீற்றிருந் தவிம
லனன்றே. 9 |
9. பொ-ரை:
பொன்னிறப் பிரமனும், பச்சைநிறத் திருமாலும்
என்ற இவர்கள் அடிமுடி காணப் புகுந்தபோது தன்னை
இன்னானெனக் காண்பதற்கியலாதபடி அழற்பிழம்பாய் நின்ற
பெருமான், புன்னை மரங்கள் பொன் போன்ற தாதுக்களை உதிர்க்க
அழகிய, குளிர்ச்சியான திருப்புகலி நகரில் மின்னல் போன்ற
இடையையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் விமலனாகிய
சிவபெருமானேயாவான்.
கு-ரை:
பிரமனும் திருமாலும் இன்னானென்று தன்னைக்
கண்டறியாதபடி தழல் சோதியானவனும், மின்னல் போன்ற
இடையையுடைய உமாதேவியாரோடும் திருப்புகலியுள் எழுந்தருளிய
பெருமானும் இவனேயாவான். 'எண்ணுங்காலும் அது அதன் பண்பே'
யென்ற தொல்காப்பியப்படி பொன்னிற (நான்முக)ன் - பச்சையன்
என்று சொல்லப்பட்டனர்.
|