2877. |
பூங்கமழ்
கோதையோ டும்மிருந் தான்புக |
|
லிந்நகர்ப
பாங்கனை ஞானசம் பந்தன்சொன் னதமிழ்
பத்திவை
ஆங்கமர் வெய்திய வாதியா கவிசை
வல்லவர்
ஓங்கம ராவதி யோர்தொழச் செல்வது
முண்மையே. 11 |
11.
பொ-ரை: பூ மணம் கமழும் கூந்தலையுடைய உமா
தேவியை ஒரு பாகமாகக் கொண்ட திருப்புகலி நகர் இறைவனை,
ஞானசம்பந்தன் சொன்ன தமிழ்ப்பாக்கள் பத்தினைத் திருத்தலத்தில்
எழுந்தருளியுள்ள சிவமாகவே கொண்டு இன்னிசையுடன் ஓதித்
துதிக்க வல்லவர்கள் பெருமையுடைய தேவலோகத்தாரும்
தொழும்படி சிவனுலகம் செல்வர் என்பது உண்மையே ஆகும்.
கு-ரை:
ஆங்கு-திருப்புகலியுள். ஆங்கு-அவ்விதமாக
என்றுமாம். உமாதேவியாரோடும். அமர்வு எய்திய-எழுந்தருளிய,
ஆதியாக-சிவம் ஆக. ஞானசம்பந்தன் சொன்ன பத்தும் ஓதி
இவற்றை அந்தச் சிவமாகவே கொண்டு இசையாற் போற்றவல்லவர்
அமராவதியோர் தொழச் செல்வர்.
|