2883. |
பண்பொலி
நான்மறை பாடியா டிப்பல |
|
வூர்கள்போய்
உண்பலி கொண்டுழல் வானும்வா னின்னொளி
மல்கிய
கண்பொலி நெற்றிவெண் டிங்களா னுங்கட
வூர்தனுள்
வெண்பொடிப் பூசியும் வீரட்டா னத்தர
னல்லனே.
6 |
6.
பொ-ரை: நான்கு வேதங்களையும் பண்ணோடு
பாடுபவனும், நடனம் ஆடுபவனும், பலவூர்களுக்கும் சென்று
மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவனும், நெற்றிக் கண்ணை
உடையவனும், வானில் ஒளிரும் வெள்ளிய சந்திரனைச்
சடையிலணிந்துள்ளவனும், திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவனும்
திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்து அரன் அல்லனோ?
கு-ரை:
உழல்வான்-சுற்றித்திரிவான். கண்பொலி நெற்றி வெண்
திங்களான்-கண் விளங்குகின்ற நெற்றியின்மீது வெள்ளிய சந்திரனை
அணிந்தவன். வெண்பொடி பூசி-வெண்மையான திருநீற்றைப்
பூசியவன்.
|