2886. |
வரைகுடை
யாமழை தாங்கினா னும்வளர் |
|
போதின்கண்
புரைகடிந் தோங்கிய நான்முகத் தான்புரிந்
தேத்தவே
கரைகடல் சூழ்வையங் காக்கின்றா னுங்கட
வூர்தனுள்
விரைகமழ் பூம்பொழில் வீரட்டா னத்தர
னல்லனே. 9 |
9. பொ-ரை:கோவர்த்தன
மலையைக் குடையாகப் பிடித்துப்
பெருமழையிலிருந்து ஆக்களையும், ஆயர்களையும் காத்த
திருமாலும், குற்றமற்ற தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும்
சிவனே முழுமுதற்பொருள் என உணர்ந்து துதிக்க, பக்கங்களில்
கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைக் காக்கின்றவன், திருக்கடவூரில்
மணங்கமழ் பூஞ்சோலைகளுடைய வீரட்டானத்தில் வீற்றிருந்தருளும்
அரன் அல்லனோ?
கு-ரை:வரை-கோவர்த்தன
மலை. மழை தாங்கினான்-
கண்ணனாகிவந்த திருமால். புரைகடிந்த-குற்றம்நீங்கி. நான்
முகத்தான்-நான்முகத்தானும் என்க. உம்மை விகாரத்தால் தொக்ககது.
புரிந்து-விரும்பி. கரை-எல்லை.
|