2890. |
கல்லினற்
பாவையோர் பாகத்தர் காதலித் தேத்திய |
|
மெல்லினத் தார்பக்கல் மேவினர் வீழி மிழலையார்
நல்லினத் தார்செய்த வேள்வி செகுத்தெழு ஞாயிற்றின்
பல்லனைத் துந்தகர்த் தாரடி யார்பாவ நாசரே. 2 |
2.
பொ-ரை: இறைவர் மலைமகளாகிய உமாதேவியை ஒரு
பாகமாகக் கொண்டவர். பக்தியோடு துதிக்கும் மென்மையான
இனத்தாராகிய அந்தணர்கள் விரும்பிப் போற்றுகின்ற வீழிமிழலையில் விளங்குபவர்.
சிவனை நினையாது செய்த தக்கனது யாகத்தை
அழித்தவர். அந்த யாகத்தில் பங்கேற்ற சூரியனின் பற்களைத் தகர்த்
தவர். தம்மைத் தொழும் அடியவர்களின் பாவத்தைப் போக்குபவர்.
கு-ரை:அடியார்
பாவநாசர்-அடியார் செய்த பாவத்தைத்
தொலைப் பவர். கல்லின் நற்பாவை ஓர் பாகத்தர்-இமயமலை
மகளாகிய உமாதேவியாரை யொருபாகத்தில் வைத்தவர்.
மெல்லினத்து நல் இனத்தார் செய்த வேள்வி-நல்லினத்தாரென்றது
இகழ்ச்சிக்குறிப்பு. எழும்-ஓடுவதற்கு எழுந்த. ஞாயிற்றின்
பல்லனைத்தும்-சூரியன் பல் முழுவதையும்.
|