| 
         
          | 2893. | பிறையுறு 
            செஞ்சடை யார்விடை யார்பிச்சை நச்சியே |   
          |  | வெறியுறு 
            நாட்பலி தேர்ந்துழல் வீழி மிழலையார் முறைமுறை யாலிசை பாடுவா ராடிமுன் றொண்டர்கள்
 இறையுறை வாஞ்சிய மல்லதெப் போதுமென் னுள்ளமே.5
 |        5. பொ-ரை:திருவீழிமிழலையில் 
        வீற்றிருக்கும் இறைவர் பிறைச் சந்திரனைச் சூடிய சிவந்த சடைமுடியையுடையவர். இடபத்தை
 வாகனமாக உடையவர். பிச்சையெடுத்தலை விரும்பும் நாள்களில்
 பலியேற்றுத் திரிவார். தொண்டரகள் பண்முறைப்படி இசைபாடி
 அதற் கேற்ப ஆட முற்பட அவர்கள் இதயத் தாமரையில்
 வீற்றிருப்பார். அவரையல்லாது எனது உள்ளம் வேறெதையும்
 நினையாது.
       கு-ரை:பிச்சையை 
        விரும்பி வெறியுறுநாள். பலியேற்றுத்திரி முறை திருவீழிமிழலையார். (அவருக்கு) முறை முறையாலிசை
 பாடுவார் ஆடி-முறையால் இசைபாடுவாராய் முறையாகவே ஆடி.
 முன்-முற்பட. இறை-தங்கும் இடம். உறை-உறைதல்-தங்குதல், முதல்
 நிலைத் தொழிற் பெயர்.
 |