2896. |
எடுத்தவன்
மாமலைக் கீழ வி ராவணன் வீழ்தர |
|
விடுத்தருள்
செய்திசை கேட்டவர் வீழி மிழலையார்
படுத்துவெங் காலனைப் பால்வழி பாடுசெய் பாலற்குக்
கொடுத்தன ரின்பங் கொடுப்பர் தொழக்குறை வில்லையே,
8 |
8. பொ-ரை:பெரியகயிலை
மலையை அப்புறப்படுத்த எடுத்த
இராவணனை அம்மலையின் கீழேயே கிடந்து அலறுமாறு அடர்த்து,
பின் அவன் சாமகானம் பாடிய இசை கேட்டு அருள்புரிந்தார்
திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் சிவபெருமான். அவர் கொடிய
காலனை உதைத்து. தம்மருகில் நின்று வழிபாடு செய்த பாலனான
மார்க்கண்டேயனுக்குப் பேரின்பம் கொடுத்தார். அச் சிவபெருமான்
தம்மைத் தொழுது போற்றும் அடியவர்கட்கு எவ்விதக் குறைவு
மில்லாமல் எல்லா நலன்களையும் கொடுப்பார்.
கு-ரை:பெரியமலையை
யெடுத்தவனாகிய(இராவணன்)
மாமலைக்கீழ் அ+இராவணன். வீழ்தரவிடுத்து-விழுந்தலறவிடுத்து
அருள் செய்து இசை கேட்டவன் என்ற விடத்து இசைகேட்டு அருள்
செய்தவன் என மாறிக் கூட்டுக. வெம் காலனைப்படத்து-கொடிய
யமனைத் தொலைத்து. பால்-பக்கத்தில் நின்று வழிபாடுசெய்த
பாலனுக்கு. இன்பம் கொடுத்தனர். தொழ-வணங்க “தந்த
துன்றன்னை“உன்னைக் குறுகினேற் கினியென்ன குறையே
என்பதும் காண்க. (திருவாசகம்)
|