2898.
|
துற்றரை
யார்துவ ராடையர் துப்புர வொன்றிலா |
|
வெற்றரை
யார்அறி யாநெறி வீழி மிழலையார்
சொற்றெரி யாப்பொருள் சோதிக்கப் பால்நின்ற சோதிதான்
மற்றறி யாஅடி யார்கள்தஞ் சிந்தையுள் மன்னுமே. 10 |
10. பொ-ரை:பொருந்திய
காவியாடை அணிந்த புத்தர்களும்,
ஆடையணியாத சுத்தமில்லாச் சமணர்களும் அறியாத நெறியில்
விளங்குபவர் திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் இறைவர்.
சொல்லையும், பொருளையும் கடந்து அருள் ஒளியாக விளங்கும்
இறைவர், தம்மைத் தவிர வேறெதையும் அறியாத அடியார்களின்
சிந்தனையில் நிலையாக வீற்றிருப்பார்.
கு-ரை:துற்று-பொருந்திய.
துவர் ஆடையார்-மருதம்
தோய்க்கப்பட்ட ஆடையையுடையவர். துப்புரவொன்றில்லார்-ஒரு
பயனும் அறியாதவருமாகிய சமணர். துப்புரவில்லார் துணிவு
(பெரிய 1973.) வெறு அரையார்-ஆடையில்லாதவர்; திகம்பரர்.
வெற்றுச்சொல். தெரியா-சொல்லால் அறியப்படாத சொல்லுக்கு
அப்பாற்பட்ட பொருளாகிய ஒளிக்கு அப்பால் நின்ற. சொல்லும்
பொருளும் இறந்த சுடர் என்றபடி (திருவாசகம்)
சோதிதான்-பேரொளிப்பிழம்பானது. மற்று அறியா-பரமே கண்டு,
பதார்த்தங்கள் பாராத. அடியார்கள் தம் சிந்தையுள் மன்னும்
திருவீழிமிழலையாராகிய சோதி, சொல்லையும் பொருளையும் கடந்து
நின்றதாயினும் அடியார் சிந்தையுள் மன்னும்.
|