2906. |
சனிபுதன்
ஞாயிறு வெள்ளிதிங் கட்பல தீயன |
|
முனிவது
செய்துகந் தானைவென் றவ்வினை மூடிட
இனியருள் நல்கிடென் றண்ணல்செய் தவிரா மேச்சுரம்
பனிமதி சூடிநின் றாடவல் லபர மேட்டியே. 7
|
7.
பொ-ரை: சனி, புதன், சூரியன், வெள்ளி, சந்திரன் மற்றும்
அங்காரகன், குரு, ராகு, கேது ஆகிய நவக்கிரகங்களால் தீமை
வரும் எனச் சோதிடன் கூறியதைக் கேட்டுக் கோபம் கொண்டு
அவர்களைச் சிறையில் வைத்த தன் ஆற்றலுக்கு மகிழ்ந்த
இராவணனை அழித்து வெற்றி கொண்ட பழி தீர, அருளை வேண்டி
அண்ணல் இராமபிரான் வழிபட்ட தலம் இராமேச்சுரம். அங்கு
எழுந்தருளியிருப்பவர் குளிர்ச்சி பொருந்திய சந்திரனைச் சூடித்
திருநடனம் செய்யும் முழுமுதற் பொருளான சிவபெருமானே ஆவார்.
கு-ரை:
பல தீமை விளைவிப்பனவாகிய சனி முதலிய
நவக்கிரகங்களை என்பது முதலடிக்குப் பொருள். முனிவுசெய்து -
கோபித்துச் சிறையிலிட்டு. உகந்தான் - தன்னாற்றலை மெச்சியவன்.
இந்திரசித்துப் பிறக்கும் பொழுது சோதிடம் இன்றுள்ள கிரக
நிலையில் குழந்தை பிறந்தால் தீமையே தரும் என்றுகூற இராவணன்
தான்பெற்ற வரத்தின் வலியால் - அக்கிரகங்களை யொருசேரச்
சிறையில் இட்டுக் குழந்தை பிறந்த பின்னர் அக்கிரகங்களை
விடுதலை செய்தான் இராவணன் என்பது இராமாயணம்.
|