| 
         
          | 2911. | விண்டவர் 
            தம்புர மூன்றெரித் துவிடை |   
          |  | யேறிப்போய் வண்டம ருங்குழல் மங்கையொ டும்மகிழ்ந்
 தானிடம்
 கண்டலு ஞாழலு நின்றுபெ ருங்கடற்
 கானல்வாய்ப்
 புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுன
 வாயிலே.                          
            2
 |  
       
       2. 
        பொ-ரை: பகையசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு செய்து, இடபவாகனத்தில் ஏறி,
 வண்டமர்ந்துள்ள கூந்தலையுடைய உமாதேவியோடு மகிழ்ந்து,
 இறைவன் எழுந்தருளியிருக்கும் இடமாவது, தாழையும், புலிநகக்
 கொன்றையும் தழைத்த கடற்கரைச் சோலையும், தாமரைகள்
 மலர்ந்துள்ள குளங்களும் சூழ்ந்த திருப்புனவாயில்
 ஆகும்.
       கு-ரை: 
        பின்னிரண்டடிக்கு - பெருங் கடற்கரைச் சோலையில் தாழையும். புலிநகக் கொன்றையும் நிலைக்கப்பெற்று, தாமரை
 மலர்களையுடைய பாய்கயல் சூழப்படப் புனவாயிலே மங்கையொடும்
 மகிழ்ந்தானிடமாவது.
 |