| 
         
          | 2912. | விடையுடை 
            வெல்கொடி யேந்தினா னும்விறற் |   
          |  | பாரிடம் புடைபட வாடிய வேடத்தா னும்புன
 வாயிலில்
 தொடைநவில் கொன்றையந் தாரினா னுஞ்சுடர்
 வெண்மழுப்
 படைவல னேந்திய பால்நெய்யா டும்பர
 மனன்றே.                          
            3
 |  
            3. 
        பொ-ரை: இடபம் பொறித்த வெற்றிக் கொடியை ஏந்தியவனும், வீரமிக்க பூதகணங்கள் சூழ நடனம் செய்யும்
 கோலத்தை உடையவனுமான சிவபெருமான் திருப்புனவாயில்
 என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி, கொன்றை மாலை அணிந்து,
 ஒளியுடைய மழுப்படையை வலக்கையிலே ஏந்தி, பாலாலும்,
 நெய்யாலும் திருமுழுக்காட்டப்பட்டு அடியவர்கட்கு அருள்புரியும்
 பரம்பொருள் ஆவான்.
   
             கு-ரை: வெல்கொடி - வெல்லும்கொடி. 
        விறல்பாரிடம் புடைபட -வலிமையையுடைய பூதங்கள் சூழ. ஆடிய வேடத்தானும்
 - ஆடிய கோலத்தை உடையவனும். தொடைநவிலக் கொன்றை
 அம்தாரினானும் - மாலையாக எடுத்துச் செல்லப்படும் கொன்றை
 மாலையையுடையவனும், கொன்றை மலர் ஓங்கார வடிவு
 உடைமையால் பிரணவமந்திரத்துக்கு உரியபொருள். சிவபெருமானே
 (பிறரல்லர்) எனற்கு அறிகுறியாய் நிலவுவது. மழுப்படை ஏந்திய
 ஆடும் பரமனன்றே - புனவாயிலில் கொன்றை
 யந்தாரினானுமாயிருப்பவன்.
 |